SuperTopAds

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய சிறுமியை கடத்திச் சென்ற மர்ம நபர்! காட்டில் இறக்கிவிட்டு தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய சிறுமியை கடத்திச் சென்ற மர்ம நபர்! காட்டில் இறக்கிவிட்டு தப்பி ஓட்டம்..

தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீடு நோக்கி சென்ற சிறுமியை கடத்தி காட்டில் விட்டுச் சென்ற மர்மநபர் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த சம்பவம் அம்பன்பொல பகுதியில் நேற்றுமுன்தினம் (18) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி, அம்பன்பொல மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளான். எனினும் மோட்டார் சைக்கிள் சிறுமியின் வீட்டை நோக்கி செல்லாமல் வேறு வழியில் சென்றுள்ளது. 

இதையடுத்து சிறுமி கத்த முயற்சித்த நிலையில்  ​​கத்தினால் கொன்றுவிடுவேன் என மிரட்டிய நபர் காட்டுப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, 

ஞாயிற்றுக்கிழமை பௌத்த மத பாடசாலைக்கு (தஹம் பாடசாலை) சென்று கொண்டிருந்த மாணவர்களைக் கண்டு காட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு குறித்த நபர் தப்பி ஓடியுள்ளார்.

வீதியில் பயணித்த சிலர் சிறுமியை பார்த்து விட்டு சம்பவ இடத்திற்கு சென்று உண்மைகளை விசாரித்ததுடன் சிறுமியின் தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் 

அம்பன்பொல பொலிஸ் நிலைய பரிசோதகர் சமன் பெரேராவின் பணிப்புரையின் பேரில் பெண் பொலிஸ் பரிசோதகர் ஹேரத் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையின் இருபுறமும் இருந்த சி.சி.டி.வி காட்சிகளும் இதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.