காதர் மஸ்தானுக்கு இந்து விவகார அமைச்சு பதவி இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் -வடிவேல் சுரேஸ்..
காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காதர் மஸ்தானுக்கு வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளன.
இங்கு முஸ்லிமொருவருக்கு எவ்வாறு , இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவியை வழங்கமுடியும். நல்லாட்சியில் ஒரு இந்துக்களும் இல்லையா குறித்த அமைச்சுப்பதவியை வழங்குவதற்கு.
இந்த செயற்பாடு இந்துக்களை கொச்சைப்படுத்தும் அவமானப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. இதனை எந்தவொரு இந்துவும் அனுமதிக்க முடியாது.
இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் எதிரப்பையும் சந்திக்க நேரிடும்.
இதேவேளை, காதர் மஸ்தானும் நானும் இயல்பாகவே நல்ல நண்பர்கள். எனக்கும் அவருக்குமிடையில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.
இவ்வாறு முஸ்லிம் ஒருவருக்கு இந்து விவகாரம் தொடர்பில் ஒரு அமைச்சுப்பொறுப்பை வழங்கினால் இந்துக்கள் இந்த விடயத்தை எவ்வாறு நோக்குவரென்றும் அவர் மேலும் தெரிவித்தார்