பொலிஸார் என கூறி வியாபாரியிடம் வழிப்பறிக் கும்பல் கைவரிசை! பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தபோது சம்பவம்...
பஸ் தரிப்பிடத்தில் நின்ற நபரிடம் தங்களை பொலிஸ் உத்தியோகஸ்த்தர் என கூறி அவரை சோதனை செய்யப்போவதாக நாடகமாடிய வழிப்பறி கும்பல் ஒரு தொகை பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளது.
களுத்துறை - கட்டுகுருந்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு, வீதிக்கு அருகில் பஸ்ஸிற்காக காத்திருந்த நபரை சோதனையிட்டு, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கால் நடையாக கறுவா மற்றும் மிளகு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (16) கட்டுகுருந்த சந்தியில் பஸ்ஸிற்காக காத்திருந்த போதே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.