SuperTopAds

கூரை பிரித்து வீட்டுக்குள் நுழைந்து 49 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

ஆசிரியர் - Editor I
கூரை பிரித்து வீட்டுக்குள் நுழைந்து 49 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

கூரையை பிரித்து வீட்டுக்குள் நுழைந்து 49 வயதான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றவாளிக்கு 11 வருட கடூழியச்  சிறைத்தண்டனையும், 15,000 ரூபா அபராதமும் விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிவான்  பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். 

இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

ஹம்பாந்தோட்டை, பதகிரிய, யஹங்கல பகுதியைச் சேர்ந்த  37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

22.12.2011 அன்று, பதகிரிய, யஹங்கல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கூரை வழியாக இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயை பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். 

குறித்த பெண் மறுநாள் ஹம்பாந்தோட்டை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.