தனித்து போட்டியிடும் தீர்மானம் இல்லை, வெறும் ஆலோசனை மட்டுமே..! தீர்மானம் எடுப்பதாயின் சித்தார்த்தன் - செல்வத்துடன் பேசியே எடுக்கப்படும்...

ஆசிரியர் - Editor I
தனித்து போட்டியிடும் தீர்மானம் இல்லை, வெறும் ஆலோசனை மட்டுமே..! தீர்மானம் எடுப்பதாயின் சித்தார்த்தன் - செல்வத்துடன் பேசியே எடுக்கப்படும்...

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் விடயத்தை அறியாமல் கதைக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

தமிழரசு கட்சி தனியாக போட்டிடுவது என்பது மட்டுமல்லாது கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடன் இணைந்து தான் இந்த முடிவை நாங்கள் எடுக்க உள்ளோம்.

தற்போது உள்ளதேர்தல் முறையின் அடிப்படையில் நாங்கள் போட்டியிடுவோமாக இருந்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளும் 

தனித்தனியே போட்டியிடுவதாக இருந்தால் கூடுதலான ஆசனத்தினை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. 

சில சபைகளில் அவ்வாறு போட்டிடுவதால் ஆசனங்கள் கூடும் என கூற முடியாது சில இடங்களில் கூடம் சில இடங்களில் குறையலாம். 

நாங்கள் பலமாக இருக்கின்ற பிரதேசங்களில் போட்டியிட்டால் எல்லா வட்டாரத்தையும் ஒரே கட்சி வெல்லுமாக இருந்தால் மட்டுமே விகிதாசாரத்தில் வருகின்ற ஆசனத்தை பெற்றுக் கொள்ள முடியும். 

ஒரே கட்சியாக போட்டியிட்டால் வட்டாரங்களில் கூடுதலாக வென்றால் விகிதாசார முறையில் நமக்கு ஆசனங்கள் கிடைக்காது. 

இந்த கணக்கினை அடிப்படையாக வைத்து தான் ஒரு தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் இதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம். 

இது சம்பந்தமாக திரு அடைக்கல நாதனுடன் சித்தார்த்தன் அவர்களோடும் பேசியிருக்கின்றேன். எனவே அவர்களுடன் பேசித்தான் இந்த நாங்கள் விடயத்தினை அறிவித்திருந்தோம். 

ஆனால் நாங்கள் இறுதி முடிவெடுக்கவில்லை ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு சபையிலும் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை வைத்து நாங்கள் அந்த முடிவை எடுப்போம் சில வேளைகளில் சில இடங்களிலே சேர்ந்து போட்டியிடலாம். 

சில இடங்களில் தனித்தனியே போட்டிடலாம் எனவே அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு தொழில்துறை ரீதியாக அந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் ஏனைய பங்காளி கட்சியுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் இந்த முடிவின் எடுப்போம்.

அதை விடுத்து நாங்கள் தமிழரசு கட்சி தனித்து தீர்மானத்தை எடுப்போம் என நாங்கள் கூறவில்லை. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விளக்கம் இல்லாது ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கின்றார். 

நாங்கள் சித்தார்த்தன் மற்றும் அடைக்கலநானுடனும் பேசித்தான் முடிவினை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு