வடமாகாண கல்வி அமைச்சை தோலுரித்த ஆசிரியர் சங்கத்தினர்! ஊடகங்களை உள்ளே விடாமல் இருட்டடிப்பு செய்யும் முயற்சியும் தோல்வி..

ஆசிரியர் - Editor I
வடமாகாண கல்வி அமைச்சை தோலுரித்த ஆசிரியர் சங்கத்தினர்! ஊடகங்களை உள்ளே விடாமல் இருட்டடிப்பு செய்யும் முயற்சியும் தோல்வி..

வடமாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சு முடிமறைப்பதாக கூறி இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வடமாகாண ஆளுநர் செயலகம் முன் இன்று புதன்கிழமை மாலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கத்தினர் வடக்கு கல்வி அமைச்சுக்கு எதற்கு? என விமர்சித்ததுடன் வடக்கு ஆளுநரே ஊழல்வாதிகளை காப்பாற்றாதே, கல்வி அமைச்சில் வழங்கப்பட்ட போலி நியமனங்களை நிறுத்து, கையூட்டல் பொக்கற்றில், வாக்குறுதிகள் காற்றில் என கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு போராட்டம் இடம்பெற்று கொண்டிருந்த நிலையில் வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஆளுநர் அலுவலகத்திற்குள் ஆசிரியர்கள் சிலரை பேச வருமாறு அழைத்தார். இந்நிலையில் குறித்த கலந்துரையாடலை ஒளிப்படம் எடுப்பதற்கு அனுமதிக்குமாறு ஆளுநர் செயலக அதிகாரிகளை ஊடகவியலாளர்கள் கேட்ட நிலையில் அனுமதி வழங்கமுடியாது என்றனர்.

இதனையடுத்து விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த கலந்துரையாடல் எவ்வித ஒழிவு மறைவு இருக்க வேண்டிய தேவை இல்லை.  புகைப்படம் மட்டுமல்ல கலந்துரையாடலையும் அவதானிக்க உள்ளே செல்லலாம் என அனுமதி வழங்கினார்.

கலந்துரையாடலில் வடமாகாண கல்வி அமைசில் இடம்பெற்ற முறைகேடுகள் ஆதாரத்துடன் வழங்கப்பட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆளுநரின் செயலாளருக்கும் மாகாண கல்வி பணிப்பாளருக்கும் எடுத்துக் கூறினார். மேலும் ஆசிரியர் இடமாற்றம், பாடசாலை அதிபர்கள் சுற்று நிருபங்களை பின்பற்றத விடையங்கள்,

நிர்வாக ஊழல் முறைகேடுகள், மாணவர்களுக்கு அதிபர்களினால் இடை விலகல் பத்திரம் கையளித்தல் உட்பட பல விடயங்களை உயர் அதிகாரிகள் முன்னிலையில் பட்டியல் படுத்தினர். கிளிநொச்சி வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கியமை முல்லைதீவு துணுக்காய் வலயப் பாடசாலைகள் தொடர்பில் கலந்துரையாடலில் பங்கு பற்றிய ஆசிரியர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.

துணுக்காய் வலயப் பாடசாலை ஒன்றில் தகுதியான அதிபர் பலகாலமாக நியமிக்கப்படாத நிலையில் அங்கு பல நிர்வாக பிரச்சனைகள் தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றையெல்லாம் கவனித்த மாகாண கல்வி பணிப்பாளர் சில விடயங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடவடிக்கைக்காக பணிக்கப்பட்டுள்ள நிலையில் சில விடயங்களை மீண்டும் சரி பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இதன்போது குறிக்கிட்டுப் பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் நாங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களுடன் எழுத்து மூலம் ஏற்கனவே தந்துள்ளோம் நடவடிக்கைதான் இல்லை என்றார். பதில் தெரிவித்த கல்வி வடமாகாண கல்வி பணிப்பாளர் 

தங்களால் முன்வைக்கப்பட்ட விடையங்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விடயங்களுக்கு எடுப்பதாக உறுதி அளித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு