SuperTopAds

வடமாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு தாராளம்! உடனடியாக தடுக்காவிட்டால் மாகாணம தழுவிய போராட்டம்...

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு தாராளம்! உடனடியாக தடுக்காவிட்டால் மாகாணம தழுவிய போராட்டம்...

வடமாகாணத்தில் அதிபர் ஆசிரியர் இடமாற்றங்கள் அரசியல்ரீதியாக தடுக்கப்பட்டுவருவதாக இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் யாழ்.மாவட்ட செயலாளர் வொல்வின் குற்றச்சாட்டினார்.

யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், 

வடமாகாணத்தில் இடமாற்றம் இன்றி பல ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களில் கடமையாற்றி வருகின்றார்கள். தற்போதைய நாட்டின் பொருளாளர் நெருக்கடியில் அவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவருகின்ற நிலையில்,

தொடர்ச்சியாக யாழ்.மாவட்டத்தில் இடமாற்றம் பெறாமல் அதிகளவு ஆசிரியர்கள் அரசியல் செல்வாக்கினால் தொடர்ந்தும் அதே பாடசாலைகளில் கடமையாற்றி வருகிறார்கள். 

எமது தொழிற்சங்கம் இன்று புதன்கிழமை வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்து பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் விளக்கிக் கூறியிருக்கிறோம். அவரிடம் வடக்கில் ஆசிரியர் இடமாற்றம் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. 

வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கான இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடியுள்ளோம். வடமாகாணத்தில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவிடாமல் 

சேவையின் தேவை கருதி என்ற வாசகத்தை எழுதி அதிபர்கள் தொடர்ச்சியாக தங்களுக்கு இசைந்த ஆசிரியர்களை பாடசாலையிலே தங்க வைத்துள்ளார்கள்.இவ்வாறு அவர்கள் தொடர்ச்சியாக தங்குவதால் பாடசாலையில் ஆசிரியர்களுக்கிடையில் முரண்பாட்டு நிலைமைகள் ஏற்படுகின்றது.

இதன் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் அதிபர்கள் கூறுவது போன்று சேவையும் இல்லை தேவையும் இல்லை அரசியல் பின்னணியில் இவர்களுடைய இடமாட்டங்களை தடுப்பதற்கான சூழ்ச்சியாகவே உள்ளது.

ஆகவே வடமாகாணத்தில் ஆசிரியர் மாற்றங்கள் உரிய முறையில் இடம்பெற வேண்டும் இல்லையெனில் மாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்தார்.