சீனாவுடன் ஆரம்பமானது போர்!! -தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் அவசர ஆலோசனை-
எல்லையில் சீனாவுடன் மோதல் சம்பவம் நடைபெற்றதை அடுத்து தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
அருணாச்சலபிரதேச எல்லையில் தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9 ஆம் திகதி இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன. இதனால் இமாச்சலபிரதேச எல்லையில் சீன படைகள் மோதலில் ஈடுபட்ட நிலையில் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், எல்லையில் சீன படைகள் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த அவரச ஆலோசனையில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.