பௌத்த பல்கலைகழகத்தில் பிக்கு மாணவர்களின் ஆடைகளை களைந்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதை! விசாரணைகள் ஆரம்பம்..
ஹோமாகம பௌத்த பல்கலைகழகத்தில் பிக்கு மாணவர்களின் ஆடைகளை களைந்து பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அபய என்ற சித்திரவதை அறையில் வைத்து கொடூரமான தாக்குதல் நடத்தி ஆடைகளை களைந்து பாலியல் வன்கொடுமை செய்தமை மற்றும் சித்திரவதைகள் குறித்தும் முறைப்பாடு செய்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் இரண்டு இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், அவர்களில் இந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் உள்ளதாகவும்
அவர்கள் பொலிஸாரிடம் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.