விபத்தை ஏற்படுத்திய சாரதி டுபாய்க்கு தப்பி ஓடிவிட்டாராம்!
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் சொசுகு கார் மோதி ஆட்டோ சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சொகுசு கார் சாரதி டுபாய்க்கு தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட நபர் ஒரு வர்த்தகர் எனவும் கொழும்பின் பிரபல ஹோட்டலில் அறையொன்றை பதிவு செய்து தங்கியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சனிக்கிழமை இவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார் இவரை கைதுசெய்து நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.