பொலிஸ் சீருடையில் வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட முயற்சி! பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் கைது..

பொலிஸாரின் சீருடையுடன் வீடொன்றில் கொள்ளையடிக்க சென்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் உட்பட மூவரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மீ தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையடிப்பதற்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் போன்று சென்றிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு, கொள்ளையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.




