SuperTopAds

பொதுமக்கள் பயன்படுத்தும் வீதியில் ஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிள் ஓடி வித்தை காட்டியவர்களுக்கு நடந்த தரமான சம்பவம்!

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள் பயன்படுத்தும் வீதியில் ஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிள் ஓடி வித்தை காட்டியவர்களுக்கு நடந்த தரமான சம்பவம்!

மோட்டார் சைக்கிள் ஒன்றை ஒரு சக்கரத்தில் ஓட்டிய குற்றச்சாட்டில் கைதான 6 இளைஞர்களுக்கு தலா 25 அயிரம் தண்டம் விதித்த நீதிமன்றம் சாரதி அனுமதிப் பத்திரத்தை 1 வருடத்திற்கு இடைநிறுத்தியுள்ளது. 

ஹொரண நீதிவான் நீதிமன்ற நீதிவான் சந்தன கலன்சூரிய இந்த உத்தரவினை வழங்கியுள்ளார். மொரகஹஹேன, ஹொரணை போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆறு இளைஞர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

மொரகஹஹேன, ஒலொபொடுவ நவம் மாவத்தை பிரதேசத்தில் இளைஞர்கள் குழுவொன்று ஒற்றைச் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு இடையூறாகவும், 

மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதாக மொரகஹஹேன பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குறித்த இளைஞர்களை கைதுசெய்துள்ளனர்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் தீர்ப்பளித்த நீதிவான், மோட்டார் சைக்கிள்களை பொலிஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு, பிள்ளைகளின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் 

மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் எச்சரித்தார்.

Radio