குடும்பத்துடன் காரில் பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் மீது இனந்தொியாத நபர்கள் தாக்குதல்! மனைவி, மாமி மீதும் சரமாரி தாக்குதல்..
பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் அவருடைய கும்பத்தினர் மீது 3 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
ஆனமடுவ தத்தேவ குளத்திற்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாயாருடன் பொலிஸ் சார்ஜன்ட் ஆனமடுவ நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது
மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் காரை நிறுத்தியுள்ளனர். பின்னர் இந்த மூவரும் காரிலிருந்தவர்களை வாகனத்திலிருந்து வெளியே இழுத்துத் தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதுடன் தலைக்கவசம் மற்றும் கை, கால்களால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.