15 வயதான பாடசாலை மாணவனை முத்தமிட்ட 3 பிள்ளைகளின் தாயான ஆசிரியை பிணையில் விடுதலை!

15 வயதான பாடசாலை மாணவனை முத்தமிட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியை தலா 10 லட்சம் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹொரணை நீதிவான் நீதிமன்ற நீதிவான் சந்தன கலன்சூரிய மேற்படி உத்தரவை வழங்கியுள்ளதுடன், சாட்சிகளுக்கு எந்தவொரு தொந்தரவையும் வழங்ககூடாது எனவும் உத்தரவுவிட்டிருக்கின்றார்.
ஹொரணை கல்வி வலய அலுவலகத்துடன் இணைந்த பாடசாலை ஒன்றில் 10ம் தர ஆசிரியையான 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.




