வடமாகாணத்திற்கான ரயில் பாதைகள் மூடப்படுவதால் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணம் அழைத்துவர மாற்று ஒழுங்கு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திற்கான ரயில் பாதைகள் மூடப்படுவதால் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணம் அழைத்துவர மாற்று ஒழுங்கு..

புகைரத பாதை மூடப்படுவதால் விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணம் அழைத்துவருவது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வடக்கு ரயில்வேயின் திருத்தப் பணிகள் காரணமாக புகையிரத சேவையை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்படும் எனவும்,

இதனால் விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்லுவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார். 

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் செய்தியாளர் வினவியபோது இதனைத் தெரிவித்தார். தற்போது நாட்டுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் டிசம்பர் 8 ஆம் திகதி வரை 

கிட்டத்தட்ட 17,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருவதில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான உள்நாட்டு விமான சேவைகள் நாட்டில் இல்லாதது பாரிய இழப்பாகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். 

வடக்கு ரயில்வேயின் திருத்தப் பணிகள் காரணமாக புகையிரத சேவையை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரத்மலானையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்வது குறித்தும் இதற்கென விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். 

என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு