கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆசிரியர் மீட்பு! கடத்தல் காரர்களை மடக்கியது பொலிஸ், வாகனங்கள் பறிமுதல்..

ஆசிரியர் - Editor I
கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆசிரியர் மீட்பு! கடத்தல் காரர்களை மடக்கியது பொலிஸ், வாகனங்கள் பறிமுதல்..

கடத்திச் செல்லப்பட்டு வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தல் சந்தேநகரை கைது செய்துள்ள பொலிஸார் கடத்தலுக்கு வயன்படுத்திய வாகனங்கள் உள்ளிட்ட  பல பொருட்களை மீட்டிருக்கின்றனர். 

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றித்தடுத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது 27 வயதுடைய குறித்த சந்தேக நபர் 

ஈரான் சிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாடகைக்குப் பெறப்பட்ட வேன் மற்றும் மோட்டார் சைக்கிள், இரண்டு ஜக்கட்கள் ஏ.ரீ.எம்.அட்டைகள் கையடக்க தொலைபேசி உட்பட பொருட்களையும் பொலிஸா கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 6ம் திகதி மாலை முதல் குறித்த ஆசிரியர் காணாமல் போன சம்பவம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.காத்தான்குடி மெத்தைப்பள்ளி வீதியில் வைத்து தினமும் 10ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்குப் பெறப்பட்ட வேனின் மூலம் குறித்த ஆசிரியரை மேற்படி சந்தேக நபரும் அவரது சகோதரரும் கடத்திச் சென்று காங்கேயனோடை ஈரான் சிட்டியிலுள்ள தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய அவரது சகோதரர் அன்றைய தினமே டுபாய் நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்ட ஆசிரியர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக காத்ததான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு