மனைவி, பிள்ளைகளின் கண்முன்னால் அடித்துக் கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்!
மனைவி, பிள்ளைகளின் கண்முன்னால் 34 வயதான இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உடுகம பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் நுழைந்த சிலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்றபோது அவரது மனைவி, குழந்தை மற்றும் தாய் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட நபரை உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.