SuperTopAds

பிரான்ஸிற்கு ஆட்களை அனுப்புவதாக கூறி மோசடி! தரகர் மற்றும் பிரான்ஸ் செல்வதற்கு சென்ற 8 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
பிரான்ஸிற்கு ஆட்களை அனுப்புவதாக கூறி மோசடி! தரகர் மற்றும் பிரான்ஸ் செல்வதற்கு சென்ற 8 பேர் கைது..

பிரான்ஸிற்கு ஆட்களை அனுப்புவதாக மோசடியில் ஈடுபட்ட தரகர் மற்றும் பிரான்ஸ் செல்வதற்கு முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

வெள்ளவத்தை பிரதேசவாசி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கஹதுடுவ, பிரகதி மாவத்தையில் உள்ள தரகர் ஒருவரிடம் குறித்த ரூ. 800,000 பணமாக வழங்கியுள்ளார். 

அவருடன் மேலும் 6 பேர் விமான நிலையத்திற்கு சென்றிருந்த போதிலும் அவர்களில் எவராலும் வெளிநாடு செல்ல முடியவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தலுக்கு தலைமை தாங்கிய கஹதுடுவவில் உள்ள வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரே கைது செய்யப்பட்டிருக்கின்றார்.