ரஷியாவை தாக்க்க ஆயுத உதவி!! -உக்ரைனுக்கு வழங்கிய அமெரிக்கா-

ஆசிரியர் - Editor II
ரஷியாவை தாக்க்க ஆயுத உதவி!! -உக்ரைனுக்கு வழங்கிய அமெரிக்கா-

ரஷியா மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் படைகளுக்கு கூடுதலாக 275 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா ஆரம்பித்த போர் 10 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது.

ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 19.3 பில்லியன் டொலர் மதிப்பிலான அதிகமான இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு