யாழ்.காங்கேசன்துறை நோக்கி பயணித்த யாழ்.தேவி புகைரதம் மோதி முன்னாள் பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை நோக்கி பயணித்த யாழ்.தேவி புகைரதம் மோதி முன்னாள் பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பலி..

கொழும்பிலிருந்து - யாழ்.காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த யாழ்.தேவி புகைரதம் மோதியதில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று தனது வீட்டுக்கு முன்பாக ரயிலில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று (08) பகல் 11.45 மணிளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதப்பட்டே இவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு