யாழ்.மாவட்ட மக்களிடம் இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள கோரிக்கை!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களிடம் இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய காலநிலையினால் மின் விநியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக தமக்கு தொியப்படுத்தும்படி இ.மி.ச கேட்டுள்ளது. 

குறிப்பாக பல இடங்களில் மரங்கள் முறிந்துள்ள நிலையில் அதனால் மின் கம்பிகள் அறுந்துவிழும் அபாயமும் உள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்கள் அறியப்பட்டால், 

உடனடியாக அது குறித்து மின்சாரசபைக்கு அறிவிப்பதுடன், மின்சாரசபையினர் சம்பவ இடத்திற்கு வரும்வரையில் பொதுமக்கள் அங்கு மிகுந்த எச்சரிக்கையுடன் விலகி இருக்கவேண்டும் 

எனவும் மின்சாரசபை யாழ்.மாவட்ட மக்களுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கமான ‭

021 202 4444‬ என்ற எண் மூலமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக அவசர தொலைபேசி இலக்கங்கள்..

யாழ்ப்பாணம்- 0212222609

கோண்டாவில்- 0212222498

சுன்னாகம்- 0212240301

சாவகச்சேரி- 0212270040

பருத்தித்துறை- 0212263257

வட்டுக்கோட்டை- 0212250855

வேலணை- 0212211525

காங்கேசந்துறை- 0212245400

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு