கொழும்பு ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி! -தம்புள்ள ஓராவுக்கு 2 ஆவது தோல்வி-

ஆசிரியர் - Editor II
கொழும்பு ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி! -தம்புள்ள ஓராவுக்கு 2 ஆவது தோல்வி-

லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) அத்தியாத்தின் முதலாவது சுற்றில் கொழும்பு ஸ்டார்ஸ் தனது முதலாவது வெற்றியை நேற்று வியாழக்கிழமை பதிவு செய்துள்ளது. 

தனது ஆரம்பப் போட்டியில் கண்டி பெல்கன்ஸ் அணியிடம் தோல்விகண்ட    கொழும்பு  ஸ்டார்ஸ், தனது 2 ஆவது போட்டியில் தம்புள்ள ஓரா அணியை 9 ஓட்டங்களால் வெற்றிகொண்டது. அதேவேளை தம்புள்ள ஓரா தனது 2 ஆவது தோல்வியைத் தழுவியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் 20 பந்துப்பரிமாற்றங்களில் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் லஹிரு குமார 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஓரா 20 பந்துப்பரிமாற்றங்களில் 7 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. 

பந்துவீச்சில் சுரங்க லக்மால் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கரிம் ஜனத் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டொமினிக் ட்ரேக்ஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு