ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்ததில் முதியவர் பலி, மேலும் 3 பேர் படுகாயம்..

ஆட்டோ மது மரம் முறிந்து விழுந்ததில் 61 வயதான முதியவர் உயிாழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இராகலை - புரூக்சைட் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஹைபொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நோக்கிப் பயணித்த ஆட்டோ மீதே பாரிய மரம் வீழ்ந்துள்ளது.
ஆட்டோ சாரதி உள்ளிட்ட நால்வர் ஆட்டோவில் பயணித்த நிலையில், 61 வயதான பி.எஸ்.மயில்வாகனம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஏனைய மூவரும் காயங்களுடன், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




