புதுவீடு கனவை நனவாக்கிய ராமர்

விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் முகம் பதித்த ராமர் தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் முக்கிய நபராக கலந்து கொண்டு வருகிறார்.
என்னதான் தொலைக்காட்சி பிரபலம் என்ற போதிலும், ராமர் ஒரு பொறுப்புள்ள அரசு அதிகாரி என்றும் பெயரெடுத்துள்ளார். ராமர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ராமர் தற்போது சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் சக விஜய் டிவியில் பணியாற்றுபவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.