நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி மரணம்

ஆசிரியர் - Editor II
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி மரணம்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக தனது 67 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் அவர் மறைந்த நடிகரும், இயக்குநருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக பூந்தோட்டம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். 

இதைத் தொடர்ந்து தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேல் கூட்டணியில் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து நகைச்சுவை நடிகனாக அறியபட்டவர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பல நடிகர்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பொன்னவராயன் கோட்டையில் உள்ள அவரது இல்லதில் காலமானார். 

இவருக்கு மனைவி புஷ்பவல்லி, லோகேஷ், ராம்குமார், ஸ்ரீதேவி என்ற மகன்கள், மகள் உள்ளனர். சிவ நாராயணன் காலமானதை அடுத்து திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு