SuperTopAds

விசேட அதிரடிப்படை என கூறி 27 லட்சம் கொள்ளை! பணத்தை இழந்தவரே கொள்ளையனை துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்...

ஆசிரியர் - Editor I
விசேட அதிரடிப்படை என கூறி 27 லட்சம் கொள்ளை! பணத்தை இழந்தவரே கொள்ளையனை துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்...

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி என கூறி பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றை நிறுத்தி 27 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (07) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன் தன்னை விசேட அதிரடிப்படை அதிகாரி என அடையாளப்படுத்தி 27 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளார். 

பின்னர் கொள்ளையடித்த பணத்துடன் கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளான். இதன்போது காரில் வந்த நபர் மற்றொரு நபருடன் இணைந்து கொள்ளையனை மடக்கி பிடித்து, 

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். 41 வயதான கொள்ளையனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Radio