14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது!

இரு பெண் பிள்ளைகளின் தந்தையான வங்கி முகாமையாளர் ஒருவர் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது சிறுமி ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படுகின்றது.
இதனடிப்படையில் வங்கி முகாமையாளர் பம்பலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




