விரைவில் அமைச்சராகிறார் உதயநிதி

ஆசிரியர் - Editor II
விரைவில் அமைச்சராகிறார் உதயநிதி

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உதயநிதி விரைவில் அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட போது அதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்ற பேச்சு உலா வருகிறது. ஒரு நல்ல நாளில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எதிர்வருமு; 14 ஆம் திகதி அல்லது சனிப்பெயர்ச்சிக்கு பின்னர் உதயநிதி அமைச்சராவது உறுதி என்று தகவல் வெளியாகி வருகிறது.

அப்போது மேலும் சிலருக்கு புதிதாக அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும், ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, சாத்தூர் ராமச்சந்திரன், மூர்த்தி, சி.வி.கணேசன் உள்ளிட்ட சில அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்துக்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு