தீக்ஷனா, வியாஸ்காந்த் அபாரா பந்துவீச்சு!! -தம்புல்ல ஜயன்ட் அணியை ஊதித்தள்ளிய ஜப்னா கிங்ஸ்-

ஆசிரியர் - Editor II
தீக்ஷனா, வியாஸ்காந்த் அபாரா பந்துவீச்சு!! -தம்புல்ல ஜயன்ட் அணியை ஊதித்தள்ளிய ஜப்னா கிங்ஸ்-

மகேஷ் தீக்ஷனா, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆபாராமான பந்துவீச்சிலும், சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் ஜப்னா கிங்ஸ் அணி தம்புல்ல ஜயன்ட் அணியை 9 விக்கெட்டுக்களால் அபாரமாக வெற்றி கொண்டது. 

இந்த வெற்றியுடன் நடப்பு சம்பியன் கிங்ஸ் அணி இத் தொடரின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில் இன்று புதன்கிழமை நடந்த 3 ஆவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் - தம்புல்ல ஜயன்ட் அணிகள் மோதிக் கொண்டன. இதில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற தம்புல்ல ஜயன்ட் அணி முதல்லி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதன்படி களம் இயங்கிய தம்புல்ல ஜயன்ட் அணி ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது. இந்நிலையில் நிர்ணையிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

மிக சிறப்பாக வந்துவீசிய மகேஷ் தீக்ஷனா, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோல் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 122 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் நிதனமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

சதீர சமரவிக்ரம 44 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு சிக்ஸ், 7 பவுண்டறிகளுடன் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். மறுபுறம் அவிஷ்க பெர்னாண்டோ 49 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு சிக்ஸர் 4 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். 

அடுத்ததாக மைதானம் நுழைந்த அஷான் ரந்திகா ஒரு பந்தில் 4 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு