SuperTopAds

முன்னாள் ஜனாதியின் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் வீட்டில் சடலமாக மீட்பு! கடத்தப்பட்டு காணாமல்போயிருந்தவரா?

ஆசிரியர் - Editor I
முன்னாள் ஜனாதியின் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் வீட்டில் சடலமாக மீட்பு! கடத்தப்பட்டு காணாமல்போயிருந்தவரா?

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சடலம் நேற்று மாலை 4.00 மணியளவில் வெயாங்கொடை பட்டலகெதரவில் உள்ள அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். 

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான சமிந்த ராஜகருணா என்பவரே உயிரிழந்துள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சார்ஜன்ட் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது கையெழுத்தில் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிய ஆவணம் ஒன்றும் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

Radio