SuperTopAds

3 விபச்சார விடுதிகளை நடத்திவந்த முன்னாள் இராணுவ சிப்பாய் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் கைது!

ஆசிரியர் - Editor I
3 விபச்சார விடுதிகளை நடத்திவந்த முன்னாள் இராணுவ சிப்பாய் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் கைது!

3 விபச்சார விடுதிகளை நடத்திவந்த முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவு சிப்பாய் ஒருவர் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் மாத்தளை சந்தி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

42 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 170 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.அநுராதபுரம் நகரில் இரகசியமாக 3 விபச்சார மற்றும் மசாச் நிலையங்களை நடத்திவரும் குறித்த நபர்,

அங்கு பணிபுரியும் பெண்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்காக அந்த இடங்களுக்கு வரும் ஆண்களை இலக்கு வைத்து இந்த ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.