SuperTopAds

6 மணித்தியால மின்வெட்டு தவிர்க்க முடியாமல்போகலாம்! மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையில் காரசார விவாதம்..

ஆசிரியர் - Editor I
6 மணித்தியால மின்வெட்டு தவிர்க்க முடியாமல்போகலாம்! மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையில் காரசார விவாதம்..

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த பிரேரணை அமைச்சரவையில் நேற்றைய தினம் நிண்ட நேரம் விவாதத்திற்கு எடுத்தக் கொள்ளப்பட்டிருக்கின்றது. 

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் மின்சார சபையின் நஷ்டத்தைக் குறைக்க மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை அதிகரிக்காமல் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாளாந்தம் சுமார் 06 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அமைச்சரவையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாமலேயே கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.