யுத்த டாங்கி மோதியதில் 19 வயதான இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யுத்த டாங்கி மோதியதில் 19 வயதான இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

யுத்த டாங்கி மோதியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கொக்காவில் இராணுவ பயிற்சி முகாமில் இடம்பெற்றிருக்கின்றது. 

பயிற்சியின்போது இந்த விபத்து இடம்பெற்றதாக கூறியுள்ள பொலிஸார் விபத்தில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தம்புத்தேகம சிறிமாபுர பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை 

மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு