வைத்தியரின் இலட்சிணை பொறிக்கப்பட்ட காரில் ஹெரோயினுடன் இருவர் கைது! யாழ்.கொடிகாமத்தில் பொலிஸார் அதிரடி..

ஆசிரியர் - Editor I
வைத்தியரின் இலட்சிணை பொறிக்கப்பட்ட காரில் ஹெரோயினுடன் இருவர் கைது! யாழ்.கொடிகாமத்தில் பொலிஸார் அதிரடி..

வைத்தியர்களை அடையாளப்படுத்தும் இலட்சிணையுடன் இரு இளைஞர்கள் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

காரில் பயணித்த இரு இளைஞர்களில் ஒருவரிடம் 600 மில்லிகிராமும் மற்றைய இளைஞனிடம் 430 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காரில் பயணித்த இளைஞன் ஒருவரின் சகோதரர் வைத்தியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், 

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு