16 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவன், அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவர்கள்..! 3 பேர் கைது, ஒருவர் தலைமறைவு..

ஆசிரியர் - Editor I
16 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவன், அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவர்கள்..! 3 பேர் கைது, ஒருவர் தலைமறைவு..

16 வயதான சிறுமியை சிறுமியுடன் ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததை மறைந்திருந்து வீடியோ எடுத்ததுடன் அதனை பயன்படுத்தி சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்த இருவர் மற்றும் சிறுமியின் காதலன் ஆகியோர் நேற்றுக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயது சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுமியின் காதலன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவனது வீட்டில் எவரும் இல்லாதபோது வீட்டுக்கு கூட்டிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான்.

அதனை அவனின் நண்பர்கள் 3 பேர் ஒளிந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சிறுமியின் காதலனின் நண்பர்கள் சிறுமியை தொடர்பு கொண்டு நீயும் உனது காதலனும் உறவு மேற்கொண்ட வீடியோ சிடி வடிவில் இருப்பதாகவும், நீ எங்களுடன் உடல் உறவு கொள்ள வருமாறும் இல்லாவிடில் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் 16 வயது காதலன் மற்றும் அவனது 16 வயதுடைய நண்பர்கள் உட்பட 3 பேரை கைது செய்ததுடன். 

சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஒருவர் ஒருவர் தலை மறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு