போதைப் பொருள் வைத்திருந்தவரை கைது செய்த பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்க முயற்சித்தவர் கைது!

ஆசிரியர் - Editor I
போதைப் பொருள் வைத்திருந்தவரை கைது செய்த பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்க முயற்சித்தவர் கைது!

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான நபர் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவிசாவளை தல்துவ சந்தியில் பத்து கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2100 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது அவரது நண்பர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான 

பொலிஸ் பரிசோதகர் பி.ஜி.எஸ்.ஆர் சஞ்சீவவிடம் சென்று கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டாம் என்றும் 

தான் 50000 ரூபாவை இலஞ்சமாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரி சந்தேக நபரை மறுநாள் வருமாறு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இது தொடர்பில் அந்தப் பொலிஸ் பரிசோதகர் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்து 

அவர் ஊடாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கும் விடயத்தை கூறியுள்ளார். இதனையடுத்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இலஞ்ச ஒழிப்புப் பிரிவினர் சென்றுள்ளனர். 

இதன்போது பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவவிடம் வந்த நபர் அவரிடம் தான் கூறிய தொகையில் முதல் கட்டமாக 25000 ரூபாவை கொடுக்க முயற்சித்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு