SuperTopAds

கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்கள் 7ல் நுாதன முறையில் மோசடி செய்த இளம் கணவன், மனைவி கைது!

ஆசிரியர் - Editor I
கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்கள் 7ல் நுாதன முறையில் மோசடி செய்த இளம் கணவன், மனைவி கைது!

கடைகளுக்கு சென்று பெறுமதியான கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்துவிட்டு அதற்கான பணத்தை வங்கி கணக்கில் போட்டுள்ளதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளம் தம்பதிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 7 கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு கணவன் மனைவி ஜோடியாக சென்று பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்துள்ளனர்.

பின்னர் அதற்கான பணத்தை இணையவழி பணபரிமாற்றம் ஊடாக கடையின் வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளதாக கூறியுள்ளனர். எனினும் கடையின் வங்கிகணக்குகளில் பணப்பரிமாற்றம் இடம்பெற்றிருக்கவில்லை. 

இந்நிலையில் இது போலியான பணபரிமாற்றம் என கண்டறிந்ததையடுத்து கடை உரிமையாளர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பொலன்னறுவை கட்டின்வில பிரதேசத்தைச் சேர்ந்த

 26 மற்றும் 21 வயதுடைய இளம் கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மோசடியாக கொள்வனவு செய்த தொலைபேசிகளை பொலன்னறுவை கல்வல பிரதேசத்திலுள்ள அவர்களது உறவினர் ஒருவருக்கு சொந்தமான 

தொலைபேசி விற்பனை நிலையத்தில் விற்றுள்ளமையும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள 7 கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களில் இருந்தே கையடக்க தொலைபேசிகளை மோசடி செய்துள்ளனர்.

இதேபோல் கல்முனை மூதூர் பிரதேசங்களில் இருந்தும் தொலைபேசி மோசடி தொடர்பில் பலர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.