SuperTopAds

பல்கலைகழகத்திற்குள் புகுந்து பாதுகாப்பு கமராக்களை செயலிழக்கச் செய்து மின் உபகரணங்களை திருடிய இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
பல்கலைகழகத்திற்குள் புகுந்து பாதுகாப்பு கமராக்களை செயலிழக்கச் செய்து மின் உபகரணங்களை திருடிய இருவர் கைது!

மொரட்டுவ பல்கலைகழகத்திற்குள் நுழைந்து பாதுகாப்பு கமராக்களை செயலிழக்க செய்து மின் உபகரணங்களை திருடிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேக நபர்கள் பாதுகாப்பு கமெராக்களை செயலிழக்கச் செய்து 

அங்குள்ள அறை ஒன்றுக்குள் பிரவேசித்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்கள் கட்டுபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார், அவர்கள் அதிகளவு ஹெரோயின் 

மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் கூறினர்.