வடமராட்சி கிழக்கில் தென்பகுதி மீனவர்கள் அடாத்தாக தங்க இலஞ்சம் வழங்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கில் தென்பகுதி மீனவர்கள் அடாத்தாக தங்க இலஞ்சம் வழங்கப்பட்டது..

வடமராட்சி கிழக்கில் 404 படகுகள் ,  2 ஆயிரம் மீனவர்கள் ,  12 வாடிகள் அமைத்து தொழில் புரிய 10 நிறுவனங்களிற்கு அனுமதியை கொழும்பில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நேரடியாக வழங்கிய அனுமதியினால் உள்ளூரில்  ஆயிரக் கணக்கான மீனவர்கள் பாதிப்படைவதோடு அப்பகுதியே சுகாதாரச் சீர்கேட்டிற்கும் உள்ளாவதனை தொடர்ந்தும் பொறுக்க முடியாது மீனவர்கள் முதல் அரசியல்வாதிகள் வரைக்கும் கிளர்ந்தெழுந்தனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியினை அதிகளவில் ஆக்கிரமித்து  ஆயிரக் கணக்கானோர் தங்கி நின்று கடலட்டை பிடிப்பதனால் உள்ளூர் மீனவரகளின் தொழில் பாதிப்படைவது தொடர்பில் கடந்த வாரம் அதிக கவனம் செலுத்தப்பட்டு கொழும்புவரையில் கொண்டு செல்லப்பட்டது.

வடமராட்சி கிழக்கில் பிற மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே முழுமையாக தங்கு தொழிலைப் புரியும் இந்த அட்டை பிடிப்பில்  தற்போது 404 படகுகளில் தொழில் புரிவதற்காக 2012 பேரிற்கு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நேரடியாக  உத்தியோகபூர்வ அனுமதியை  வழங்கியுள்ளதாக திணைக்களம் சார் தகவல்கள் உறுதி செய்கின்றன.

இவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிகளினைப் பெற்று வந்தவர்கள் உள்ளூரில் 5 சங்கங்களின் அனுமதிகளைப் பெற்று 8 தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் தங்கி அயலில் உள்ள நிலங்களையும் அபகரித்து தமது தொழில் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தொழிலிற்காக தங்கி நிற்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் 10 நிறுவனங்கள் ஊடாகவே அனுமதியை பெற்றுள்ளனர். 

குறித்த அனுமதியை பெற்றுள்ள 10 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் தமிழர்களிற்குச் சொந்தமானது. மேலும் 4 நிறுவனங்கள் முஸ்லீம்களிற்குச் சொந்தமானது. இரண்டு நிறுவனங்கள் சிங்களவர்களிற்குச் சொந்தமானது.

இதில் முஸ்லீம்களின் ஆர்.ஆர்.ஐ நிறுவனம் மற்றும் அஸ்லான் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் சார்பாகவே அதிக படகுகள் தொழிலில் ஈடுபடுகின்றன. அடுத்ததாக சுகன் , சிறி கணேசன் , சென்லூசியஸ் , சிறி விநாயகர் ஆகிய  4 தமிழ் நிறுவனங்கள் சார்பிலும் மூன்றாவது இடத்தில் சிங்கள நிறுவனமான சங்கா நிறுவனம் சார்பிலும் தொழில் இடம்பெறுகின்றது. இதனை படகு எண்ணிக்கையில் கூறுவதானால் 283  படகுகள் முஸ்லீம் நிறுவனங்கள் சார்பிலும் 96 படகுகள் தமிழ் நிறுவனங்கள் சார்பிலும் 21 படகுகள் சிங்கள நிறுவனங்கள் சார்பிலும் தொழில் புரிகின்றனர்.

இங்கே இன ரீதியில் நிறுவனங்கள் இயங்குகின்றபோதும் கடலில் இறங்கி அட்டை பிடிக்கும் தொழிலாளர்கள் அதிகமாக முஸ்லீம்களும் சிங்களவர்களுமே உள்ளனர் தமிழ் மீனவர்களில. அட்டை பிடிக்கும் தொழிலில் பரீட்சையமானவர்கள் குறைவாக கானப்படுவதே இதற்கு காரணாகவும் கூறப்படுகின்றது. 

குறித்த அட்டை பிடித்தல் தொழிலானது நிறுவனங்கள் முதல் தொழிலாளர்கள் வரையில் அதிகம் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாகவே கானப்படுகின்றது. அதாவது ஓர் படகினை கொண்டு செல்லும் ஓட்டிக்கு நாள் ஒன்றிற்கு 4 ஆயிரம் ரூபா சம்பளத்தினை நிறுவனங்கள் வழங்குவதோடு அட்டை பிடிப்பதற்காக செல்லும் இரு ஓட்டிகளிற்கும் தலா 10 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் ரூபா வரையில் சம்பளம் வழங்கப்படுகின்றது. இதனால் தமது சம்பளத்தில் தாக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தினமும் அதிகரித்த தொகையில் அட்டை பிடிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இதற்காக குறித்த தொழிலிற்குரிய சட்டங்களை மேற்படி தொழிலாளர்கள் பகிரங்கமாகவே மீறுகின்றனர். அதாவது குறித்த தொழிலினை கரையில் இருந்து  5 கடல் மைல் தொலைவிற்குள் மேற்கொள்ள முடியாது , மாலை 6 மணிக்கு பின்பு தொழிலில் ஈடுபட முடியாது. எக் காரணம் கொண்டும் ஒளி பாச்சி தொழில் புரிய முடியாது. உள்ளிட்ட பல சட்ட ரீதியான தடைகள் உள்ளன. இருப்பினும் இவை அனைத்தும் பகிரங்கமாகவே மீரப்பட்டு தொழில் புரியப்படுகின்றமையே தற்போது உள்ளூர் மீனவர்கள் பெருதும் பாதிப்படைவதற்கு காரணமாகவுள்ளது.

அதாவது உள்ளூரில். மெறப்படவேண்டிய அனுமதியை கொழும்பில் வழங்கும் திணைக்களம் அவர்கள் மேற்கொள்ளும் சட்ட மீறல்களிற்கும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. குறித்த திணைக்களம் உரிய சட்ட நடவடிக்கைகளை முழுமையாக நேர்த்தியாக கடைப்பிடித்திருப்பின் உள்ளூர் மீனவர்கள் 50 வீதம் பாதுகாக்கப்பட்டிருப்பர். ஆனால் அதனை மேற்கொள்ள திணைக்களம் தவறிவிட்டது. இதற்கு பொழும்பின் அழுத்தமும் கடற்படையின் போதிய ஒத்துழைப்பு இன்மையுமே முக்கிய காரணமாகவுள்ளது .

இதேநேரம் இவ்வாறு குறித்த நிறுவனங்கள் சார்பில் இவ்வளவு அதிக மீனவர்கள் எவ்வகையிலும் இங்கு தங்கு தொழிலைப் புரிய முடியாத சூழலில் உள்ள பின்னணியை ஆராய்ந்த போது மேலும் சில தகவல்கள் எட்டியது. இந்த நிறுவனங்கள் இப் பகுதியில் தங்கி நின்று தொழில் புரிவதற்காக 5 கூட்டுறவுச் சங்கங்கள் எழுத்து மூல அனுமதியை வழங்கியுள்ளதோடு ஓர் கிராமிய சங்கமும் அனுமதி வழங்கியுள்ளது.  இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் 5 கூட்டுறவுச் சங்கங்களில் ஓர் கூட்டுறவுச் சங்கமானது தீவக சங்கமாகும். 

இவ்வாறு கொழும்பு அனுமதியுடன் வந்தவர்களிற்கு உள்ளூரில் சில சங்கங்களும்  திருட்டுத்தனமாக அனுமதிக்கான சிபார்சை தெரிவிக்க 7 தனியார் தமக்குரித்தான இடங்களையும் வழங்கினர். இவ்வாறு இடம்பெற்ற தொழிலினால் பிற மாவட்டத்தவர்களும் நாடும் பொருளாதாரத்தினை ஈட்டியபோதும் உள்ளூர் மீனவர்கள் நட்டமடைய பிரதேசம் சுகாதாரச் சீர்கேடானது.

இதன் காரணமாக உள்ளூர் மீனவர்கள்  போராட்டத்தில் குதிக்க அவர்களுடன் வெளியூர் மீனவர்களும் முரன்பாடு வளுத்தது. இவ் விடயத்தினை உடன் கையில் எடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையிலும் உடன் தீர்வு எட்டாத காரணத்தினால் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் முற்றுகையிடப்பட்டது. காலை 7.30ற்கு ஆரம்பித்த போராட்டத்தில் நண்பகல் 11.30ஐ தாண்டியவேளையில் குறித்த பகுதியில் தங்கியிருந்து கடல் அட்டை மீன்பிடியில் ஈடுபடுவோர் மேற்கொள்ளும் அனைத்து சட்ட மீறல்களும் உடன் 3 தினங்களிற்குள் கட்டும்படுத்தப்படும் என யாழ். மாவட்ட நீரியல் வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் உத்தரவாதம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து பிரதிப் பணிப்பாளர் நலமையிலாள அலுவலகர்கள் வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு அன்று மாலையே விரைந்தனர். கடலட்டைத் தொழிலிற்கு அனுமதிக்கம்பட்ட விதிமுறையினை மீறும் படகுகள் உடனடியாக கைது செய்யப்படும. என ஒவ்வொரு வாடாயாகச் சென்று தெரிவித்தனர். அத்துடன் உடனடியாகவே கடற்படையினருடன் தொடர்பு கொண்டும் சட்டத்தினை மீறும் அத்தனை கடலட்டைப் படகுகளையும் கைது செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் குறித்த விடயம் தொடர்பில் நிகழப்போவது என்ன. என்ற எதிர்பார்ப்பே தற்போது உள்ளூர் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப் பெரும் கேள்வியாகவுள்ளது.  இதேநேரம் திணைக்களத்திடம் 404 படகுகளிற்கு அனுமதி்எடுக்கப்பட்ட நிலையில் 500 படகுகள் வரையில் தொழில் புரிவதான குற்றச் சாட்டு உள்ளமை தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்படுகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக பல விடயங்களிற்கு மௌனம் காத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அந்தப் பாதயினை மாற்றி மீண்டும் போராட்டப் பாதையினை தேர்வு செய்துள்ளமை இனியும் பல போராட்டங்கள் தொடரும் என்ற முன்னெச்சரிக்கை கட்டியம் சொல்வதாகவும் அமைகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு