15 வயதான பாடசாலை மாணவியின் வீட்டுக்குச் சென்று மாணவியை துஷ்பிரயோகம் செய்த 42 வயதான ஆசிரியர் கைது!
15 வயதான பாடசாலை மாணவி ஒருவருடைய வீட்டுக்குச் சென்று மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது,
இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதிவான் நளினா இம்புலாகொட உத்தரவிட்டார்.
ஹொரணை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.