பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை கலந்த இனிப்பு வகைகள் விற்பனை! வியாபாரிகளை மடக்கிய பொலிஸார்..
பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதை கலந்த இனிப்பு வகைகளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
சந்தேகநபர்கள் இனிப்பு பானம் மற்றும் லொலிபப்பில் போதைப்பொருள் கலந்து விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 54 இனிப்பு பான போத்தல்கள் மற்றும் 55 வகையான லொலிபாப்கள் கைப்பற்றப்பட்டன.
இனிப்பு பானம் மற்றும் லொலிபாப்களுக்கு அடிமையான மாணவர்களின் பெற்றோரின் முறைப்பாடுகள் மற்றும் தனிநபரின் ரகசிய தகவலின் அடிப்படையில் சத்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து சில காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த இனிப்பு வகைகளுக்கு அடிமையாகி பிள்ளைகளின் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (29) கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நேற்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர்
டிசெம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.