லீசிங் பணம் செலுத்தாததால் மோட்டார் சைக்கிளை பறிக்கவந்த லீசிங் நிறுவன ரவுடிகள் தள்ளி விழுத்தியதில் பெண் பிரதேசசபை உறுப்பினர் படுகாயம்..
லீசிங் பணம் கட்டாததால் மோட்டார் சைக்கிளை பறிப்பதற்கு வந்த நிதி நிறுவனம் ஒன்றின் ரவுடிகள் தள்ளி விழுத்தியதில் பிரதேசசபை பெண் உறுப்பினர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் லசந்தி ஹேமமாலா என்ற பெண்ணே இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண் உறுப்பினர் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பெற்றுள்ளார். இவர் கொரோனா காலகட்டத்தில் பல தடவைகள் குத்ததைக்கான தவணைக் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்றுமுன்தினம் (30) மாலை அவரது மோட்டார் சைக்கிளைக் கைப்பற்ற வந்த ரவுடிகள் குறித்த பெண்ணை தள்ளிவிட்டு அவர்கள் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.