தொழிலதிபரின் வங்கிக் கணக்கிலிருந்து 3 மணித்தியாலத்தில் 1 கோடியே 37 லட்சத்தை ஆட்டையை போட்ட கொழும்பு பல்கலைகழக மாணவர்கள் உட்பட 8 பேர் கைது!
தொழிலதிபர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் இணையம் ஊடாக திருடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 24 ஆம் திகதி இரவு மூன்று மணி நேரத்துக்குள் இடம்பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் உக்ரேன் பிரஜைகள் இருவர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவு மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டார். ஒருவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.