SuperTopAds

பொது இடத்தில் நடந்த துப்பாக்கி சூடு! சட்டத்தரணி உட்பட 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
பொது இடத்தில் நடந்த துப்பாக்கி சூடு! சட்டத்தரணி உட்பட 3 பேர் கைது..

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பாணந்துறை - சில்வன் ஒழுங்கையில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, சந்தேகநபரான சட்டத்தரணியால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட அனுமதிப்பத்திரத்துடனான கைத்துப்பாக்கி மற்றும் சட்டத்தரணியின் வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிப் பிரயோகத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை.