சரித் அசலங்க அபாரம்!! -ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி-

ஆசிரியர் - Editor II
சரித் அசலங்க அபாரம்!! -ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி-

இலங்கை மற்றும் சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதற்கமைய, அந்த அணி 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

அந்த அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய இப்ராஹிம் ஸட்ரான் 162 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் கசுன் ராஜித 3 விக்கட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 314 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 பந்துப்பரிமாற்றங்களின் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 83 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு