இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை!! -இந்திய தூதரகம் ஊடாக முன்னெடுக்கப்படும் என்கிறார் அண்ணாமலை-

ஆசிரியர் - Editor II
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை!! -இந்திய தூதரகம் ஊடாக முன்னெடுக்கப்படும் என்கிறார் அண்ணாமலை-

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்ககப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப் பட்டினத்தில் இருந்து கடந்த 28 ஆம் திதகி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக சொல்லி 24 மீனவர்களையும், 5 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து இலங்கை மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

உடனடியாக இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகனிடமும் தெரிவிக்கப்பட்டது. நமது மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைந்து மீட்க தமிழக பா.ஜ.க சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள நமது இந்திய தூதரக அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட 24 மீனவர்களை பிணையில் விடுவிக்கவும், 5 படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சிறைப்பிடிக்கப்பட்ட நமது மீனவர்கள் தாயகம் திரும்ப துரித நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முருகனுக்கும் தமிழக பா.ஜ.க சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக பா.ஜ.க மீனவ சமுதாய மக்களுக்கு என்றும் அரணாக இருக்கும் என்றுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு