ஒரு ஓவரில் 7 சிக்சர்கள்!! -புதிய சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்-

ஆசிரியர் - Editor II
ஒரு ஓவரில் 7 சிக்சர்கள்!! -புதிய சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்-

விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் மகாரஷ்டிரா அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பந்துப்பரிமாற்றத்தில் மட்டும் 7 சிக்சர்களை விளாசி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

குறித்த தொடரின் உத்தரப் பிரதேசம் - மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. இதில் நாணயசுழல்ச்சியில் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் அணித் தலைவருமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ஓட்டங்களை குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும்.

இந்த போட்டியின் 49 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் 7 சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார். அந்த ஓவரை உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். அதில் 43 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு