SuperTopAds

லொறி சாரதியிடம் கை நீட்டிய 4 பொலிஸார் வேலையை இழந்தனர்..!

ஆசிரியர் - Editor I
லொறி சாரதியிடம் கை நீட்டிய 4 பொலிஸார் வேலையை இழந்தனர்..!

லொறிச் சாரதியிடம் 12,000 ரூபா இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சார்ஜன்ட்  உட்பட 4 பொலிஸார் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 

கடந்த 20ஆம் திகதி கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவந்தன பிரதேசத்தில் லொறி ஒன்றை நிறுத்தி அதன் குறைபாடுகள் தொடர்பில் கண்டுபிடித்போதும், 

அது தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 12,000 ரூபாவை இவர்கள் இலஞ்சமாகப் பெற்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பதுளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி. எம். ஜயரத்ன பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார்.