மாணவர்களை இலக்குவைத்து போதை மாத்திரை விற்பனை! 33 வயதான நபரை மடக்கிய பொலிஸார், வடமாகாணத்தில் நடந்த சம்பவம்..
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை விநியோகம் செய்துவந்த குற்றச்சாட்டில் 33 வயதான நபர் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
வவுனியா - பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 539 போதைப்பொருள் மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நீண்டகாலமாக சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.