இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு இன்று திருமணம்

ஆசிரியர் - Editor II
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு இன்று திருமணம்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இன்று திங்கட்கிழமை கொழும்பில் தனித்தனி இடங்களில் திருமணம் செய்து கொண்டனர். கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோரே திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

நேற்று கண்டி பல்லேகலவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இலங்கை அணியில் இவர்கள் பங்கேற்றிருந்தனர். அந்தந்த திருமண நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை மாலைக்குள் அவர்கள் அணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டி, பல்லேகலவில் புதன்கிழமை திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு தயாராவதற்காக கிரிக்கெட் வீரர்கள் அணிக்குத் திரும்பவுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு